நாளை வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி!

77பார்த்தது
நாளை வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக பிரதமர் மோடி நாளை கேரளா செல்கிறார். இதனையடுத்து கல்பட்டா, மேற்பாடு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் பிரதமர் செல்லும் சாலையில் சோதனை முறையில் வாகனங்களை இயக்கி பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 131 பேரை தேடும் பணி இன்று 11வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்பு படையினருடன் இணைந்து உறவினர்களும் தொலைந்த உறவுகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி