இந்தியன் சூப்பர் லீக் 11ஆவது கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த தொடரில் கோவாவில் நேற்று (டிச.20) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா - மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்ட நேர முடிவில் எப்.சி. கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. கோவா அணி சார்பில் பிரிசன், ஆட்டத்தின் 12 மற்றும் 68ஆவது நிமிடங்களில் 2 கோல்கள் அடித்தார். மோகன் பகான் அணி சார்பில் டிமித்ரி, 55ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.