அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த மாதம் 20ஆம் தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். தற்போது ஒவ்வொரு துறைகளுக்கும் அதிகாரிகளையும், கேபினட் மந்திரிகளையும் நியமித்து வருகிறார்.இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா உடனான மிகப்பெரிய வர்த்தக இடைவெளியை குறைக்கவில்லை எனில், மிகப்பெரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவிடம் இருந்து கியாஸ், கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.