ரயிலில் கர்ப்பிணி பலி - கோட்டாட்சியர் விசாரணை

80பார்த்தது
ரயிலில் கர்ப்பிணி பலி - கோட்டாட்சியர் விசாரணை
கடலூர்: விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி கஸ்தூரி என்பவர் உயிரிழந்தார். உளுந்தூர்பேட்டை அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி கஸ்தூரி வளைகாப்பிற்காக சொந்த ஊருக்கு ரயிலில் பயணித்த நிலையில், வாந்தி எடுப்பதற்காக கதவு அருகே நின்றிருந்த போது தவறி விழுந்து பலியானார்.

கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால், அவரது பெற்றோரிடம், விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் அகமது விசாரணை நடத்தி வருகிறார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கஸ்தூரியின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி