அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர்

61466பார்த்தது
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர்
அனுஷ்கா நடித்த 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நவீன் பொலிஷெட்டி. தெலுங்கு திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் நவீன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பைக்கிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதன் காரணாக அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி