இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

51பார்த்தது
இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு
தென்தமிழகத்தில் இன்று(மார்ச்28) ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி