5 ஓபிஎஸ்களின் வேட்பு மனுக்களும் ஏற்பு

60421பார்த்தது
5 ஓபிஎஸ்களின் வேட்பு மனுக்களும் ஏற்பு
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேரும், எம்.பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். பெயர் குழப்பம் காரணமாக ஓட்டுக்கள் பிரியும் என்பதால் ஓபிஎஸ் தரப்பிற்கு இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மனு தாக்கல் செய்த 5 பன்னீர் செல்வம்களின் வேட்பு மனுக்களும் தற்போது ஏற்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி