காற்றின் தரம் மோசம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

155பார்த்தது
காற்றின் தரம் மோசம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர். தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி