'உடன் பிறவா தம்பியே' உடைந்து அழுத பொன்முடி

29887பார்த்தது
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இன்று நல்லடக்கம் முடிந்த பின்னர் பேசிய அமைச்சர் பொன்முடி, “கடந்தாண்டு என்னுடைய உடன்பிறந்த தம்பியை இழந்தேன். இந்த ஆண்டு என்னுடைய உடன்பிறவா தம்பியை இழந்து விட்டேன். அவரின் இழப்பு நம்முடைய கழகத்திற்கே பேரிழப்பு. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதே எங்களுக்கு தெரியாது. தனது உடல்நிலையைப் பற்றி பொருட்படுத்தாமல் தொகுதி பணிகளுக்காகவும், கழகப் பணிகளுக்காகவும் சுற்றி சுற்றி வந்தார்” என்று மனமுடைந்து பேசினார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி