ரூ.5.88 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள் பறிமுதல்

52பார்த்தது
ரூ.5.88 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள் பறிமுதல்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் பிடிஓ அலுவலகம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கொரியர் நிறுவன வேனை மடக்கிப் பிடித்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.5,88,14,000 மதிப்பிலான தங்க நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய பில்கள் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையில் கொடுத்து நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி