பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள், இஞ்சி, வாழைப்பழம், கரும்பும் முக்கிய இடம் வகிக்கிறது. அந்த வகையில் திருவாரூர் நீடாமங்கலம், ஆதனூர் சுற்றுவட்டார கிராமங்களில் சம்பா காலடி பயிர்களோடு பன்னீர் கரும்பும் நடவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் நன்கு வளர்ந்த கரும்புகள் சாயாமல் இருக்க வேர்ப்பகுதியில் மண் அணைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசும், வியாபாரிகளும் அதிக விலைக்கு கரும்புகளை வாங்கிச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.