பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்நிலையில் மனு பக்கர் மற்றும் சரப்ஜோத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் சிறந்த திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியதற்காக பாராட்டப்பட்டனர். தென் கொரியாவுக்கு எதிராக செவ்வாய்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.