சென்னையில் பிரபலமான உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. அங்கு, திரையரங்க கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்பு வரவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம், சென்னையில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று. உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு திரைகள் அங்கிருந்தன.