பிரதமர் மோடிக்கு பிஸ்டல், ஹாக்கி மட்டை பரிசளிப்பு

52பார்த்தது
பிரதமர் மோடிக்கு பிஸ்டல், ஹாக்கி மட்டை பரிசளிப்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று (ஆகஸ்ட் 15) சந்தித்து வாழ்த்து பெற்றனர். துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என 2 வெண்கலம் வென்ற மனு பாக்கர், பிரதமர் மோடிக்கு ஏர் பிஸ்டலை பரிசாக அளித்தார். மேலும், வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்சி மற்றும் ஹாக்கி மட்டையை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர். அதன்பின், அனைத்து வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

தொடர்புடைய செய்தி