நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் காவல்துறை ஏ.டி.எஸ்.பி.யிடம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். இதன் மூலம் இந்த மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற இருப்பது உறுதியாகியுள்ளது.