கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதி!

52பார்த்தது
கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதி!
சசிகலாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாட்டில் விதிகளை மீறிய கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றக் கோரி கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007-ம் ஆண்டு அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் 2008-ம் ஆண்டு ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கொடநாடு பஞ்சாய்த்து தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி