4 இந்திய மாணவர்கள் இறந்தது எப்படி?

75பார்த்தது
4 இந்திய மாணவர்கள் இறந்தது எப்படி?
ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அருகே உள்ள ஆற்றில் 4 இந்திய மாணவர்கள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரஷியாவின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த ஹர்ஷல் அனந்த்ராவ் தேசாலே, ஜிஷான் அஷ்பக் பிஞ்சாரி, ஜியா ஃபிரோஜ் பிஞ்சாரி மற்றும் மாலிக் குலாம்கஸ் முகமது யாகூப் ஆகியோர் வோல்கோவ் ஆற்றின் அருகே நடந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக ஆற்றில் விழுந்த மற்றொரு மாணவி நிஷா பூபேஷ் சோனாவனே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடற்கரையில் இருந்து ஆற்றுக்குள் விழுந்த ஒருவரை காப்பாற்ற முயன்ற போது இவ்விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி