சிதைந்த மோடியின் பிம்பம் - சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்

78பார்த்தது
சிதைந்த மோடியின் பிம்பம் - சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்
18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடியை பலவீனப்படுத்திவிட்டதாகவும் இதுவரை இருந்த மோடி பிம்பம் சரிந்துவிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தேர்தல் மூலம் மோடி வெல்ல முடியாதவர் என பாஜகவினர் கட்டமைத்த பிம்பம் முதல்முறையாக பொய்த்துவிட்டதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

30 ஆண்டு கால ராமர் கோவில் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியது என்றாலும் அது தேர்தலில் எந்த பலனையும் ஏற்படுத்தவில்லை என்று டைம் பத்திரிகை கூறியுள்ளது. 2016ம் ஆண்டில் நிதி அமைச்சருக்குக் கூட தெரியாமல் பணமதிப்பிழப்பு அறிவித்தது, ஜம்மு – காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக நாடாளுமன்றத்தில் அறிவித்ததை சுட்டிக் காட்டிய நியூயார்க் டைம்ஸ், இனி இது போன்ற நடவடிக்கைகள் நடக்காது என்றும் தெரிவித்துள்ளது. மோடி ஆட்சி அமைந்தாலும் அவரது அரசாங்கம் கூட்டணிக் கட்சிகளின் கைகளில் இருக்கும் என்றும் கத்தார் ஊடகமான அல் ஜஸீரா கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி