‘இந்தியா’ கூட்டணியிடம் தேசத்தை ஒப்படைக்க மக்கள் விரும்பவில்லை

52பார்த்தது
‘இந்தியா’ கூட்டணியிடம் தேசத்தை ஒப்படைக்க மக்கள் விரும்பவில்லை
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான வித்தியாசத்தில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்பை தவற விட்டது. அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஜூன் 7) பேசுகையில், “எங்களின் ‘இந்தியா’ கூட்டணி இன்னும் பக்குவம் அடைய வேண்டும், அதற்கான கால அவகாசத்தை மக்கள் கொடுத்துள்ளனர், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் - திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. கேரளாவிலும் கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் தனித்து நின்றன. இந்த குறைபாட்டோடு ‘இந்தியா’ கூட்டணியிடம் தேசத்தை ஒப்படைக்க மக்கள் விரும்பவில்லை.” என்றார்.

தொடர்புடைய செய்தி