தமிழகத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

54பார்த்தது
தமிழகத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் (39). இவரது மனைவி வெங்கடலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். நாகேஸ்வரராவ் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். குடும்பத்தார் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் நேற்று (ஜூன் 6) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி