அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில், வேப்பூர் ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் தலைமையில் இன்று மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில்
ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் ஒன்றிய
பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், நெல் கொள்முதல் நிலையம் தனியாருக்கு தாரைவாத்திடுவதை கண்டித்தும்,
நெல் கொள்முதல் நிலையத்தை மாநில அரசே நடத்தி வேண்டும்,
100 நாள் வேலை வழங்கிட வேண்டும் அதற்கான ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும்,
என் மனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மோடி அரசையும் அதன் பட்ஜெட்டையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தில், பெரம்பலூர் வட்டச் செயலாளர் செல்லமுத்து , பால்வெண்டர் கமிட்டி ஒன்றிய அமைப்பாளர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், முத்துச்சாமி குமார், பிரவீன் குமார், சங்கீதா, பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி