பெரம்பலூர் : அமைப்புசாரா தொழிலாளர்கள் கவனத்திற்கு...

55பார்த்தது
பெரம்பலூர் : அமைப்புசாரா தொழிலாளர்கள் கவனத்திற்கு...
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து குறைபாடுள்ள விண்ணப்பங்களை சரி செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் இதர 15 நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கான கல்வி திருமணம் மகப்பேறு இயற்கை மரணம் விபத்து மரணம் உள்ளிட்ட பல உதவித்தொகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

உதவித்தொகைகள் கோரி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்படும் பதிவு புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் மீதான குறைபாடுகளுக்கு தெளிவுரை கோரி தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அந்த குறைபாடுகளை பத்து நாட்களுக்குள் சரி செய்து சமர்ப்பித்து தொழிலாளர்கள் பயன்பெறலாம். மேலும், நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களுக்கு தெளிவுரை கோரி அனுப்பப்பட்ட குறைபாடுகளை நேரடியாக கைபேசி அல்லது இணைய மூலமாக சரி செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கேட்டுக்கொள்ளளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி