நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளர் என். கௌதமன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். தொடர்ந்து, மகிபாலன் - உமா மகேஸ்வரி ஜோடி திருமணத்தை
நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். பின்னர், மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மணமக்களை அன்போடு கேட்டுக்கொள்வது என்னவென்றால், உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.