தூத்துக்குடியில் திமுக பிரமுகரின் பிறந்தநாளுக்கு அவருக்கு 100 லிட்டர் பாலில் பாலாபிஷேகம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது. பத்மநாப மங்கலம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான வைகுண்ட பாண்டியன் என்பவர் தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நிலையில் இந்த அலப்பறையை அவரின் ஆதரவாளர்கள் செய்துள்ளனர். வைகுண்ட பாண்டியன் கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.