கோயம்புத்தூர் சேரன்மாநகரில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் நேற்று(மார்ச்.2) அங்கு சென்று சோதனை செய்தபோது விபசாரம் நடப்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் விபசாரம் நடத்திய 43 வயது பெண் புரோக்கரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபர் தேடப்படுகிறார்.