மதுரையில் JCB இயந்திரத்தை இயக்கி 25-க்கும் அதிகமான வாகனங்களை சேதப்படுத்திய சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை சிறுவன் இடித்து தள்ளிய பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நேற்று (மார்ச். 02) நள்ளிரவு இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியது. சிறுவனை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர், அவரிடம் விசாரணை நடக்கிறது.