பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மாவிலங்கை கிராமத்தில், 12.03.2025 (புதன்கிழமை) அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே, ஆலத்தூர் வட்டம், மாவிலங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவிலங்கை கிராம நிர்வாக அலுவலகத்தில் முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அல்லது தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.