பிரதமரின் உருட்டால் ஆடிப்போன மக்கள்.. ஸ்டாலின்

63பார்த்தது
பிரதமரின் உருட்டால் ஆடிப்போன மக்கள்.. ஸ்டாலின்
அமலாக்கத்துறை கைதுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என பிரதமர் மோடி ஒரு உருட்டு உருட்டியிருக்கிறார்.
பிரதமரின் உருட்டில் பேட்டி எடுத்தவர்களே ஆடிப்போய்விட்டனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமர் பேட்டியை பார்த்தவர்கள் இது நியூஸ் டைமா காமெடி டைமா என குழம்பிவிட்டனர் என திருவண்ணாமலை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். பேரிடர் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஆண்டுதோறும் வழங்கக்கூடிய மாநில பேரிடர் நிவாரண நிதியைக் கொடுத்துவிட்டு, வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுத்தோம் என்று ஒன்றிய பாஜக அரசு கூறுவது, கரகாட்டக்காரன் படத்தில் வரும், 'அதுதான் இது' என்ற வாழைப்பழ காமெடியை நினைவூட்டுகிறது என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி