உதவிப் பேராசியர் பணிகளுக்கான செட் தேர்வு அறிவிப்பு வெளியீடு

74பார்த்தது
உதவிப் பேராசியர் பணிகளுக்கான செட் தேர்வு அறிவிப்பு வெளியீடு
பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக நெட் என்ற பெயரில் தேசியத் தகுதித் தேர்வும், செட் என்ற பெயரில் மாநிலத் தகுதித் தேர்வும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான செட் தேர்வை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது. தமிழ், கணிதம் உள்ளிட்ட 43 பாடங்களுக்கான செட் தேர்வு ஜுன் 3-ம் தேதி கணினி வழியில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 3 முதல் 25ஆம் தேதிக்குள் மாநில தகுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்குத் தேர்வு நடைபெறும்.

தொடர்புடைய செய்தி