தமிழில் ‘ஆடுகளம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை டாப்ஸி தனது நீண்ட நாள் காதலரான மத்யாஸ் போவை கடந்த மார்ச் 23ம் தேதி உதய்பூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். மிக ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். புகைப்படங்கள் கூட வெளியாகாத நிலையில் இந்த செய்தி உண்மைதானா? என்று ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்தது. தற்போது அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் டாப்ஸியின் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.