கட்சத்தீவுக்கு பதிலாக இந்தியா பெற்ற இடம் எது தெரியுமா?

574பார்த்தது
கட்சத்தீவுக்கு பதிலாக இந்தியா பெற்ற இடம் எது தெரியுமா?
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் எல்லையை வகுக்கும் வகையில் இரு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதில் முதலாவது ஒப்பந்தம் 1974ல் கையெழுத்தானது. அதில் பாக் நீரிணை பகுதியில் உள்ள கச்சத்தீவு இலங்கை பகுதியை சேர்ந்தது என முடிவெடுக்கப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தம் 1976ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கையெழுத்தானது. அதில் மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியா - இலங்கை எல்லை பகுதி நிர்ணயம் செய்யப்பட்டது. அதில், கன்னியாகுமரிக்கு அப்பால் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாட்ஜ் பேங்க் என்ற பகுதி இந்தியாவிற்கு சொந்தம் என ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வாட்ஜ் பேங்க் பகுதி 4,000 சதுர மைல் (சுமார் 6,500 சகிமீ) பரப்பளவுடையது. இந்தப் பகுதியில் கடல் பல்லுயிர் வளம் அதிகம் என்பதால் மீன் வளமும் அதிகம்.

தொடர்புடைய செய்தி