இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy S25 Series மொபைல் போன்கள் நேற்று வெளியாகின. ஜெமினி ஏஐ வசதியுடன் சாம்சங் கேலக்ஸி S25, S25+ மற்றும் S25 Ultra ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. S25ன் ஆரம்ப விலை ரூ.80.999 எனவும், S25+ன் ஆரம்ப விலை ரூ.99,999 எனவும், S25 Ultraன் ஆரம்ப விலை ரூ.1.29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இன்று முதல் சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸ் மொபைல் போன்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.