நாகப்பட்டினம் - இலங்கை இடையே "சிவகங்கை" என பெயரிடப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கியுள்ளது. நாகையில் காலை 10 மணிக்கு புறப்பட்டுள்ள பயணிகள் கப்பல் இலங்கையின் கங்கேசன் துறைமுகத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நாளை காலை 10 மணிக்கு கங்கேசன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகப்பட்டினம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் இந்த பயணம் காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடியும்.