நாடாளுமன்ற தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு

63908பார்த்தது
நாடாளுமன்ற தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு
பதவிக்காலம் முடியும் முன்பே இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் ராஜினாமா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி தள்ளிப்போக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தலைமை தேர்தல் ஆணையரை வைத்து மட்டும் தேர்தலை நடத்த மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி