நரேந்திர மோடி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் தொடங்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாளில் எம்.பி.க்கள் பதவியேற்பார்கள். அதற்காக தற்காலிக சபாநாயகரை குடியரசுத் தலைவர் தேர்வு செய்வார் எனத் தெரிகிறது. சபாநாயகரை உடனடியாகத் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டங்கள் சில நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று கூறப்படுகிறது.