பாகிஸ்தானால் தூண்டப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) துணை அமைப்பான பயங்கரவாத முன்னணி (TRF) காஷ்மீர் பகுதியில் நேற்று(ஜூன் 9) பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் அல்லாதவர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களின் ஆரம்பம் மட்டுமே இது என்று TRF அறிவித்துள்ளது. தீவிரவாத தாக்குதலை அடுத்து ரியாசி பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.