பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்க பட்டியலில் 18-வது இடத்தை பிடித்தது. பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 29 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தி உள்ளது. இதையடுத்து, இன்றிரவு (செப்.8) நடைபெறும் நிறைவு விழாவில் வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தடகள வீராங்கனை பிரீத்தி பால் இந்தியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர்.