அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு நாளை (ஜனவரி.06) முதல் madhurai.nic.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அவனியாபுரத்தில் ஜன.14-ம் தேதி, பாலமேட்டில் 15-ம் தேதி, அலங்காநல்லூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. முன்னதாக கடந்த 3ஆம் தேதி இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் நடைபெற்றது.