தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் லட்சுமி என்ற பெண் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். இவரது இறப்பை தாங்க முடியாமல் தவித்த அவரது மகன் அபினய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். தாய் மற்றும் மகனின் உடல்கள் இரண்டு நாட்களாக அறையில் இருந்துள்ளன. துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.