2026 தேர்தலுக்கு முன் திமுக கூட்டணி நிச்சயம் உடையும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆருடம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை தமிழிசை சந்தித்தார். அப்போது கே.பாலகிருஷ்ணனுக்கு முரசொலி கண்டனம் தெரிவித்ததை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல கூட்டணி கட்சியினருக்கும் கருத்து சுதந்திரம் இல்லை. யாராக இருந்தாலும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. 2026 தேர்தல் வரை திமுக கூட்டணி இருக்காது" என்று பேட்டியளித்துள்ளார்.