ஒலிம்பிக் வரலாற்றில் 32 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கப்பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி நமது அண்டை நாடான பாகிஸ்தான் முன்னேறியுள்ளது. 1992 ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்லாத நிலையில், பாகிஸ்தான் வெண்கலம் வென்றது. இதையடுத்து, 1996 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பாகிஸ்தான் ஒரு பதக்கமும் வெல்லாத நிலையில், இந்தியா 26 பதக்கங்களை வென்றது. ஆனால், தற்போது பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா 71ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 62ஆவது இடத்திலும் உள்ளன.