தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமவை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று ஆகஸ்ட் 12 நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.