கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பதற்காகவே நம்பிக்கையில்லை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். பேரவையில் இதுகுறித்து உரையாற்றிய ஓபிஎஸ், "நான் இன்னும் அதிமுக உறுப்பினர்தான். அதிமுக உறுப்பினர் என்ற அடிப்படையில் கொறடா உத்தரவை மீற கூடாது என சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன்" என்று விளக்கமளித்துள்ளார்.