போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் படம் ‘மா.பொ.சி’. தற்போது இந்த படத்தின் தலைப்பிற்கு ம.பொ.சிவஞானத்தின் பேத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “மா.பொ.சி படத்தின் போஸ்டரைப் பார்த்தேன். எனது தாத்தாவின் பெயரைப் பயன்படுத்த குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று தெரியாதா?. நாளை தாத்தாவோட பயோபிக்கை எடுக்க நினைத்தால், நாங்கள் என்ன தலைப்பு வைக்கிறது?. ஆகையால் இந்தத் தலைப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.