தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

15785பார்த்தது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், 12 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (மே 30) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நகர்ப்புற வெள்ளம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நிலச்சரிவு மற்றும் பிற பேரிடர்களுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய தமிழகத்தின் தேனி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மலையோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி