கன்னியாகுமரியில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

53பார்த்தது
கன்னியாகுமரியில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று (மே 30) தொடங்கக்கூடும். இதனால் இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல் இன்று காலை 10 மணிக்குள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி