பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆல்பர்ட் எஸ் ரூடி (94) காலமானார். 1965ல் 'வைல்டு சீடு' படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கினார். 1972ல் ஆல்பர்ட்டின் பெயர் 'காட்பாதர்' படத்தின் மூலம் பிரபலமானது. இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது. மேலும், 2004ல் வெளிவந்த 'மில்லியன் டாலர் பேபி' திரைப்படத்தின் ஆஸ்கர் விருது பெற்ற தயாரிப்பாளரும் ஆவார். அதே போல் 2000-ல் வெளியான 'ரன்னிங் மேட்ஸ்' என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.