கொப்பரை தேங்காய், மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனை

75பார்த்தது
கொப்பரை தேங்காய், மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனை
சேலம்: கொங்கணாபுரத்தை அடுத்த கருங்கரடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் தேங்காய் கொப்பரை, மஞ்சள், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பல்வேறு விலை பொருட்கள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நடப்பு வாரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.6 லட்சத்து 21 ஆயிரத்து 310 மதிப்பிலான மஞ்சளும், ரூ.7 லட்சத்து 13 ஆயிரத்து 434 மதிப்பிலான தேங்காய் கொப்பரைகளும் விற்பனையானது.

மஞ்சள் விரலி ரகம் குவிண்டால் ஒன்று ரூ.17 ஆயிரத்து 99 முதல் ரூ.18 ஆயிரம், உருண்டை ரகம் குவிண்டால் ஒன்று ரூ.15 ஆயிரத்து 39 முதல் ரூ.17 ஆயிரத்து 599 வரையிலும் விற்பனையானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி