தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலையேற்றம் காரணமாக கடந்த ஆண்டு அதிக பயனர்களைப் பெற்று வந்த BSNL, தற்போது வாடிக்கையாளர்களை இழக்கத் தொடங்கியுள்ளதாக TRAI தெரிவித்துள்ளது. ஜூலை முதல் அக். மாதம் வரை 70 லட்சம் பயனர்களை BSNL பெற்றது. எனினும், சேவைத் தரம், 4G சேவை இல்லாதது போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்களை இழக்கத் தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 3.44 லட்சம் பயனர்களை இழந்துள்ளது.