சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் சா.மு.நாசர், "துணை முதல்வர் உதயநிதிக்கும் கல்லுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பல பேர் பல படங்களை எடுத்தார்கள். அந்த படங்கள் எல்லாம் தோல்வியடைந்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய வசூல் செய்துள்ளது. ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி என்று ஒரு படம் எடுத்தார். மகத்தான, மாபெரும், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதிலும் பார்த்தீர்கள் என்றால் கல் தான்" என்று கூறினார்.